ஒவ்வொருவரின் பொறுப்புடைமை

மணிடோபாவில், பணியிடப் பாதுகாப்பு மற்றும் உடல்நலச் சட்டம் என அழைக்கப்படுகின்ற ஒரு ஆவணம், பணியிட காயங்களைத் தடுக்க உதவ மேலாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் விதிகளை அமைக்கிறது. ஒவ்வொருவரும் சட்டத்தைப் புரிந்துகொண்டால், அனைத்து பணியிடக் காயங்களையும் தடுக்கலாம், மேலும் அவற்றைத் தடுப்பது ஒவ்வொருவரின் பணி என்பதை அறிந்து கொள்வார்கள்.

பணியிடப் பாதுகாப்பு மற்றும் உடல்நலக் கமிட்டி


பணியிடப் பாதுகாப்பு மற்றும் உடல்நலக் கமிட்டிகள் என்பவை பணியிடத்தைப் பாதுகாப்பாக்குவதற்கு ஒன்றிணைந்து மேலாளர்களுக்கு உதவுகிற குழுக்களாகும்.

கமிட்டிகளில் செய்யப்படும் எண்ணற்ற பணிகளாவன:
 • மேலாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் உடல்நல முன்மொழிதல்களை ஏற்படுத்துதல்
 • பாதுகாப்பு மற்றும் உடல்நலம் பற்றி பணியாளர்களிடம் பேசுதல்
 • பாதுகாப்பு மற்றும் உடல்நலத்துக்கான விதிகளை உருவாக்குதல் மற்றும் கலந்துரையாடுதல்
 • விதிகள் பற்றி பணியாளர்களுக்குப் பயிற்சியளித்தல்
 • பாதுகாப்பு மற்றும் உடல்நல ஆபத்துகளுக்காக பணியிடத்தை ஆய்வுசெய்தல்

பணியாளர் உரிமைகள் மற்றும் பொறுப்புடைமைகள்


மணிடோபா சட்டம் ஒவ்வொரு பணியாளருக்கும் இந்த உரிமைகளை வழங்குகிறது:
 • பணியிடத்தில் பாதுகாப்பு ஆபத்துகள் பற்றியும் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றியும் தெரிந்துகொள்வதற்கான உரிமை
 • பபணியிடப் பாதுகாப்பு மற்றும் உடல்நலக் கமிட்டியில் அங்கம் வகிப்பது அல்லது பணியாளர்கள் சார்பாக பேசுவது உட்பட பணியிடத்தில் பாதுகாப்பு மற்றும் உடல்நலச் செயல்பாடுகளில் பங்கேற்பதற்கான உரிமை
 • ஏதாவது பணி ஆபத்தானது அல்லது உங்களுக்கு அல்லது மற்றவர்களுக்கு பாதுகாப்பற்றது என நீங்கள் நம்பும் எந்தப் பணியையும் மறுப்பதற்கான உரிமை
 • பணியிடப் பாதுகாப்பு மற்றும் உடல்நலச் சட்டத்தின் (The Workplace Safety and Health Act) கீழ் குறிப்பிட்டுள்ள கடமைகளைச் செய்வதற்கு அல்லது உரிமைகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பதற்கான உரிமை.

பணியாளராக, உங்களது சொந்த செயல்களுக்கு நீங்கள் தான் பொறுப்பு - உங்கள் செயல்பாடுகள் பணியிடப் பாதுகாப்பைப் பாதிக்கலாம்.

பணியாளர்கள்:
 • பணியிடத்தில் காயங்களை ஏற்படுத்தக்கூடிய தவறுகளில் இருந்து உங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க உங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும்
 • பாதுகாப்பு உபகரணம், ஆடை மற்றும் சாதனங்களைச் சரியான முறையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்
 • பணியிடப் பாதுகாப்பு மற்றும் உடல்நலக் கமிட்டி மற்றும் மற்றவர்களுடன் சேர்ந்து நன்றாகப் பணியாற்ற வேண்டும்

பணி வழங்குநர் பொறுப்புகள்

பணி வழங்குநர்களுக்கு பணியிடத்தின் அதிக கட்டுப்பாடு உண்டு. அப்படியானால் பணியிடத்தின் பாதுகாப்பு மற்றும் உடல்நலத்துக்கு அதிகமான பொறுப்பு அவர்களுக்கும் உண்டு என்பதாகும்.

பணி வழங்குபவர்கள்:
 • பணியிடம், உபகரணம், கருவிகள் மற்றும் அமைப்புகளைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க அவர்களால் செய்யமுடிகிற எல்லாவற்றையும் அவர்கள் செய்ய வேண்டும்
 • பணியிடத்தில் பாதுகாப்பு ஆபத்துகள் பற்றியும் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது பற்றியும் எல்லாரும் தெரிந்துகொண்டதை உறுதிசெய்ய வேண்டும்
 • நன்கு பயிற்சியளிக்கப்பட்ட மேற்பார்வையாளர்களை பணியமர்த்த வேண்டும்
 • பணியாளர்கள் தங்கள் பணிகளைத் தொடங்கும் முன் அவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும்
 • பணியிடப் பாதுகாப்பு மற்றும் உடல்நலக் கமிட்டி மற்றும் மற்றவர்களுடன் சேர்ந்து நன்றாகப் பணியாற்ற வேண்டும்

மேற்பார்வையாளர் பொறுப்புகள்


பணியாளர் பணியில் சேர்ந்த முதல் ஆண்டில் தான் பல பணியிடக் காயங்கள் உருவாகின்றன. காயங்களைத் தடுக்கவும் தவிர்க்கவும் பணியாளர்கள் கற்றுக்கொள்ள மேற்பார்வையாளர்கள் உதவலாம்.

மேற்பார்வையாளர்கள்:
 • காயங்களைத் தவிர்ப்பது எப்படி மற்றும் அவை எங்கிருந்து ஏற்படுகின்றன என்பதைப் பணியாளர்கள் புரிந்துகொண்டதை உறுதிசெய்ய வேண்டும்
 • பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணத்தைப் பயன்படுத்துவதை உறுதிபடுத்த வேண்டும்

பணியாளர்களுக்கு மேற்பார்வையாளர்கள் பொறுப்பாகிறார்கள், பணியிடத்தில் ஏற்படும் காயங்களைத் தடுக்கலாம் என்பதை அவர்களுக்குக் கற்பிக்கலாம். இளம் பணியாளர்களுக்கு அவர்கள் முன் மாதிரிகளாக இருக்கலாம், மேலும் மொத்தப் பணியிடத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமானதாகவும் ஏற்படுத்த உதவலாம்.


Everyone's Responsibility Brochure (Tamil)

best live chat