எண் 231 பணியாளர் உரிமைகள் & பொறுப்புடைமைகள்

​பணியாளர் உரிமைகள்


ஒவ்வொரு பணியாளருக்கும்:

 • பணியிடத்தில் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றியும், இந்த ஆபத்துகளில் இருந்து ஏற்படும் காயம் அல்லது உடல்நலக்குறைவைத் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகளைப் பற்றியும் தெரிந்துகொள்வதற்கான உரிமை உள்ளது.

  • ​பணியிட ஆபத்தான பொருட்கள் தகவல் அமைப்பின் கீழ் பணியாளர் கல்வி, அதுபோல பணியிடத்தில் இரசாயன/கட்டுப்படுத்தப்பட்ட தயாரிப்புகள் பற்றிய பணி-சார்ந்த பயிற்சி ஆகியவை தெரிந்துகொள்வதற்கான உரிமையின் உதாரணமாகும், இது பணியிடப் பாதுகாப்பு மற்றும் உடல்நலச் சட்டத்தால் ஆதரிக்கப்படுகிறது.

 • கூட்டுப் பணியிடப் பாதுகாப்பு மற்றும் உடல்நலக் கமிட்டியுடன் ஈடுபடுதல், அல்லது பணியாளர் பிரதிநிதியாக பங்கேற்பது உட்பட, உதாரணமாக, பணியிடத்தில் பாதுகாப்பு மற்றும் உடல்நலச் செயல்பாடுகளில் பங்கேற்பதற்கான உரிமை உள்ளது.

 • தங்களது பாதுகாப்பு மற்றும் உடல்நலத்தில் அல்லது மற்றவர்களது பாதுகாப்பு மற்றும் உடல்நலத்தில் உடனடியான மற்றும் கடுமையான, அல்லது நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும் என பணியாளர் நம்பும் எந்த பணியையும் மறுக்கும் உரிமை உள்ளது.

 • பழிவாங்கும் நடவடிக்கை ஏதுமில்லாமல் மனிடோபா பணியிடப் பாதுகாப்பு மற்றும் உடல்நலச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கடமைகளைச் செயல்படுத்துதலுக்கான அல்லது பாதுகாப்பு மற்றும் உடல்நல உரிமைகளை எந்த பாகுபாட்டு நடவடிக்கையும் இல்லாமல் செயல்படுத்துதலுக்கான உரிமை உண்டு.

​​

பணியாளர் பொறுப்புடைமைகள்


பணியாளர்களுக்கு இருக்கும் சட்டப்படியான பொறுப்புகளாவன:

 • தங்களது செயல்பாட்டால் அல்லது கவனக்குறைவால் பாதிக்கப்படாமல் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் பாதுகாப்பளிக்க சரியான கவனம் மேற்கொள்ளுதல்.

 • பாதுகாப்பு உபகரணம், ஆடை மற்றும் சாதனங்களை முறையாகப் பயன்படுத்துதல்.

 • பணியிடப் பாதுகாப்பு மற்றும் உடல்நல கமிட்டி அல்லது பிரதிநிதியுடன் ஒத்துழைத்தல்.

 • பணியிடப் பாதுகாப்பு மற்றும் உடல்நல விவகாரங்கள் தொடர்பாக மற்ற நபர்களுடன் ஒத்துழைத்தல்.


பணியிடப் பாதுகாப்பு மற்றும் உடல்நலச் சட்டதிட்டங்களின் கீழ் சட்டப்படியான தேவைகளுக்கான குறிப்புதவி:

 • பணியிடப் பாதுகாப்பு மற்றும் உடல்நலச் சட்டம், பகுதி 2, பணியாளர்களின் உரிமைகள்;

 • பணியிடப் பாதுகாப்பு மற்றும் உடல்நலச் சட்டம், பகுதி 5, பணியாளர்களின் கடமைகள்;

 • பணியிடப் பாதுகாப்பு மற்றும் உடல்நலச் சட்டம், பகுதி 7.5, தேவையான தகவலை வழங்க வேண்டியதற்கான கடமை;

 • பணியிடப் பாதுகாப்பு மற்றும் உடல்நலச் சட்டம், பகுதி 40, பணியிடப் பாதுகாப்பு மற்றும் உடல்நலக் கமிட்டிகள் மற்றும் பிரதிநிதிகள்;

 • பணியிடப் பாதுகாப்பு மற்றும் உடல்நலச் சட்டம், பகுதி 43(1), ஆபத்தான பணியை மறுப்பதற்கான உரிமை;

 • பணியிடப் பாதுகாப்பு மற்றும் உடல்நல ஒழுங்குமுறை, பாகம் 35, பணியிடத்தின் ஆபத்தான பொருட்கள் தகவல் அமைப்புகளின் பிரயோகம் M.R. 217/2006


Bulletin 231: Worker Rights and Responsibilities (Tamil)

best live chat