எனது பாதுகாப்பு மற்றும் நலச் ச திப்புப்ப ட்டியல்

உங்கள் பாதுகாப்பு மற்றும் உடல்நலத்திற்கான உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து உங்களுக்குத் தெரிகிறது என்பதை உறுதிப்படுத்த இந்த சரிபார்ப்பு பட்டியல் உங்களுக்கு உதவும்.

 • ​நான், பின்வரும் சமயத்தில், பாதுகாப்பு மற்றும் நலப் பயிற்சியைப் பெற்றேன்:

  • நான் முதன்முதலில் வேலைக்கு அமர்த்தப்பட்ட போது.

  • நான், வேறு பணிகளுடன் அதே பணித்தளத்தின் புதிய பகுதிக்கு இடம்பெயர்ந்த போது.

  • நான், வேறு பணித்தளத்திற்கு இடம்பெயர்ந்த போது.

  • நான் பணித்தளத்திற்குத் திரும்பி வந்து, நான் அங்கு இருந்திருக்காத சமயத்தில் பணிகளும் அபாயங்களும் மாற்றமடைந்திருக்கும் போது.

 • பின்வருபவை உட்பட, பணியாளர் எனும் முறையில் எனது சட்டப்பூர்வப் பணித்தளப் பாதுகாப்பு மற்றும் நல உரிமைகளை நான் அறிவேன்:

  • பணித்தளத்தில் உள்ள அபாயங்கள் பற்றியும், என்னைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பது பற்றியும் தெரிந்துகொள்வதற்கான எனது உரிமை.

  • பணித்தளத்தில் நடைபெறுகின்ற பாதுகாப்பு மற்றும் நலம் சார்ந்த செயல்பாடுகளில் பங்கேற்பதற்கான எனது உரிமை.

  • அபாயகரமான வேலையைச் செய்ய மறுப்பதற்கான எனது உரிமை.

  • பழிவாங்கும் நடவடிக்கை ஏதுமில்லாமல், எனது பாதுகாப்பு மற்றும் உடல்நலம் சார்ந்த உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான உரிமை.

 • பின்வருவதைச் செய்ய எனது முதலாளிக்கு பொறுப்புள்ளது என்பதை நான் அறிவேன்:

  • பாதுகாப்பான பணித்தளம், பாதுகாப்பு உபகரணம், கருவிகள் மற்றும் அமைப்புகளை வழங்குவது மற்றும் பராமரிப்பது.

  • பணியாளர்களுக்கு, திறன்மிக்க மேற்பார்வையை வழங்குவது.

  • பணித்தள நடவடிக்கைகளின் காரணமாக பாதுகாப்பு அல்லது நல இடர்களுக்கு மற்றவர்கள் ஆளாகவில்லை என்பதை உறுதிசெய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது.

 • பணியாளர்கள் பின்வருவதைச் செய்கிறார்கள் என்பதை உறுதிசெய்வதற்கான பொறுப்பு எனது மேற்பார்வையாளருக்கு உள்ளது என்பதை நான் அறிவேன்:

  • பாதுகாப்பான பணி சார்ந்த நடைமுறைகளையும், பாதுகாப்பு மற்றும் நலச் சட்டங்களையும் பின்பற்றுவது.

  • எல்லா பாதுகாப்புச் சாதனங்களையும் உபயோகிப்பது மற்றும் தங்கள் பணிகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான சுய பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தையும் அணிந்துகொள்வது.

  • வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்தால் உரிய பயிற்சியைப் பெறுவது மற்றும் வேலையைத் துவங்குவதற்கு முன் அபாயங்கள் பற்றி அறியச்செய்வது.

 • பின்வருவதைச் செய்வதற்கான எனது பொறுப்பு உட்பட, பணியாளர் எனும் முறையில் எனது சட்டப்பூர்வப் பணித்தளப் பாதுகாப்பு மற்றும் நலப் பொறுப்புகளை நான் அறிவேன்:

  • என்னையும், எனது செயல்களால் அல்லது புறக்கணிப்புகளால் பாதிக்கப்படக்கூடிய மற்றவர்களையும் பாதுகாப்பதற்கு நியாயமான பராமரிப்பை மேற்கொள்வது.

  • பாதுகாப்பு உபகரணம், உடைகள், சாதனங்கள் போன்றவற்றை முறையாக உபயோகிப்பது.

  • எனது பணித்தளப் பாதுகாப்பு மற்றும் நலக் குழுவுடன் அல்லது பிரதிநிதியுடன் ஒத்துழைப்பது.

  • பணித்தளப் பாதுகாப்பு மற்றும் நல விஷயங்களில் மற்றவர்களுடன் ஒத்துழைப்பது.

 • பின்வருபவை உட்பட, எனது பாதுகாப்பு மற்றும் நல உரிமைகள் மற்றும் பொறுப்புகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை நான் அறிவேன்:

  • அபாயங்கள் இருக்கிறதா என எவ்வாறு கண்டறிவது.

  • அபாயகரமான வேலையைச் செய்ய எவ்வாறு மறுப்பது.

  • அபாயகரமான அல்லது பாதுகாப்பற்ற நிலைமைகளை அல்லது செயல்களை எவ்வாறு தெரிவிப்பது.

 • யார் எனது மேற்பார்வையாளர் என்பது எனக்குத் தெரியும் மற்றும் என்னிடம் அவர்களின் தொடர்பு எண் உள்ளது.

 • எனது பணித்தளத்தில், கூட்டுப் பாதுகாப்பு மற்றும் நலக் குழு அல்லது பாதுகாப்பு மற்றும் நலப் பிரதிநிதி இருக்கிறார். குழுவின் உறுப்பினர்கள் யார் என்பதை அல்லது பிரதிநிதி யார் என்பதை நான் அறிவேன்.

 • பணித்தளப் பாதுகாப்பும், எனது பணித்தளத்திலுள்ள நலக் கொள்கைகள் மற்றும் விதிகளும் எனக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளன மற்றும் நான் அதைப் புரிந்துகொண்டுள்ளேன்.

 • எனது பணிக்குத் தொடர்புடைய அபாயங்கள் குறித்த தகவலை நான் பெற்றுள்ளேன்.

 • நான், எனது பணியை எவ்வாறு பாதுகாப்பாய் செய்வது என்பதற்கான பயிற்சியைப் பெற்றுள்ளேன் மற்றும் எனது பணியில் நான் உபயோகிக்கின்ற சாதனங்கள், உபகரணம், பொருட்கள் போன்றவற்றிற்கான பிரத்யேகமான பாதுகாப்புப் பணி நடைமுறைகளை புரிந்துகொண்டேன்.

 • நான், WHMIS-கட்டுப்படுத்திய பொருளுடன் வேலை செய்கிறேன் மற்றும் MSDSகளை (பொருள் பாதுகாப்புத் தரவுத் தாள்கள்) எப்படி கண்டறிவது, WHMIS-கட்டுப்படுத்திய பொருளைக் கையாள்வதற்கு முன் எப்படி MSDS-ஐ மீளாய்வு செய்வது போன்றவை உட்பட WHMIS பயிற்சியைப் பெற்றேன்.

 • நான் அணிய வேண்டியுள்ள சுய பாதுகாப்பு உபகரணம் (PPE) தொடர்பாகவும், அதை எப்படி முறையாக உபயோகிப்பது என்பது தொடர்பாகவும் பயிற்சியைப் பெற்றேன்.

 • வெளியேறல் மற்றும் முதலுதவி மையங்கள் எங்கு இருக்கின்றன என்பது உட்பட அவசரகால நடைமுறைகள் தொடர்பான பயிற்சியைப் பெற்றேன்.

 • நான் செய்வதற்கு தடைசெய்யபட்டுள்ள ஏதேனும் செயல்கள் பற்றியும், எனது பணித்தளத்தில் நுழைவதற்கு எனக்கு தடைசெய்யப்பட்டுள்ள ஏதேனும் பகுதிகள் பற்றியும் நான் அறிவேன்.


My Safety and Health Checklist in Tamil

best live chat